
அஜீத் நடிக்கும் ஐம்பதாவது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக இருந்தார். வில்லன், வரலாறு படங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றிக்கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்தார்கள்.
ஆனால் அவர் அஜீத்துக்கான கதை இன்னும் முழுமை அடையாததால் ஐம்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்திருக்கிறது. பில்லா, ஏகன் படங்களில் நயந்தாரா நடித்திருப்பதால் இந்த படத்தில் த்ரிஷா அல்லது ஸ்ரேயா நடிக்கலாம் என்கிறது வெங்கட்பிரபு வட்டாரம்.
ஏகன் படத்தை அடுத்து வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் கோவா படத்தில் நடித்துவிட்டு இந்த படத்தை துவங்க விருக்கிறார்கள்.
No comments:
Post a Comment