குறித்த காலத்திற்கு முன்பே, கொடுத்த பட்ஜெட்டுக்கு குறைவாகவே படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குநர்கள் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, பேரரசு போன்றோர் இருக்கிறார்கள். ஆனால் குறித்த காலத்திற்குள்ளும் இல்லாமல் கொடுத்த பட்ஜெட்டுக்குள்ளும் இல்லாமல் சில வருடங்களை விழுங்கி படமெடுக்கும் பட்டியலில் செல்வராகவன், பாலா, கவுதம் மேனன் போன்றோர் இருக்கிறார்கள்.
இவர்களின் இந்த காலதாமத்தால்தான் படம் நன்றாக ஓடினாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் இல்லாமல் போய்விடுகிறது. லாபமெல்லாம் வட்டியிலேயே போய்விடுவதால் கொதித்து போய்விடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால்தான் தயாரிப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி மோதல் வந்துவிடுகிறது.
ஆனால் குறித்த தேதியில் இயக்குநர் ஷூட்டிங் போகாததாலேயே இயக்குநருக்கும் தயாரிப்பு தரப்பிற்கும் லடாய் வந்துவிட்டது. காக்க காக்க, மின்னலே, வேட்டையாடு விளையாடு படங்களை இயக்கிய கவுதம் மேனன் சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் வாரணம் ஆயிரம் படம் விரைவில் ரிலீஸாகவிருக்கு. காக்க காக்க கதையை அஜீத்திடம்தான் முதலில் சொல்லியிருக்கிறார் கவுதம்.
சில காரணங்களால் அஜீத் அக்கதையில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அஜீத்தும் கவுதமும் இணைவதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.சந்திரமுகி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த சிவாஜி பிலிம்ஸ் அடுத்து அஜீத்தை வைத்து தயாரிக்க விரும்பியது. அஜீத்தும் ஓகே சொல்லிவிட யாரை இயக்குநராக போடுவது என்ற கேள்வி வரும்போது கவுதம் என்றிருக்கிறார் அஜீத்.
அவர் இஷ்டப்படியே கவுதமை புக் செய்துவிட்டது சிவாஜி பிலிம்ஸ். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவக்கிவிட வேண்டும் என்று கவுதமுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டது சிவாஜி பிலிம்ஸ். ஆனால் செப்டம்பர், , அக்டோபர் மாதங்கள் போய் நவம்பர் மாதம் வந்தும் இன்னமும் படப்பிடிப்பை துவக்காததால் தயாரிப்பு தரப்பு கவுதமிடம் காரணம் கேட்க, இன்னும் கதை முழுவடையவில்லை என்றிருக்கிறார்.
கதையே இன்னும் ரெடியகாக வில்லை. இனி எப்போது படப்பிடிப்பு துவக்கி எப்போது முடிப்பார் என்று உட்கார்ந்து யோசித்த சிவாஜி பிலிம்ஸ், கவுதம் மேனனை நீக்கம் செய்ததோடு அல்லாமல் கொடுத்த அட்வான்ஸையும் திருப்பி கேட்டிருக்கிறது. கவுதம் இன்னும் இதற்கு பதில் சொல்லவில்லை.
கவுதமுக்கு பதில் தரணியை இயக்கித் தரச் சொல்லி கேட்டிருக்கிறது சிவாஜி பிலிம்ஸ். அவர் இன்னும் தனது முடிவை சொல்லவில்லை. வேட்டையாடு விளையாடுக்கு பிறகு மீண்டும் இணைவோம் என்றிருந்த கமல் இப்போது கவுதமை தொடர்பு கொண்டிருக்கிறார். தற்போது மும்பையில் இருக்கும் கமல், சென்னை வந்ததும் அந்த புராஜக்ட் பற்றி பேசுவோம் என்று சொல்லியிருக்கிறாராம்.
No comments:
Post a Comment