Friday, March 19, 2010

Goundamani


கடந்த சில நாட்களாக கழுத்து மற்றும் தோள்பட்டை வலியினால் அவதிப்பட்ட கவுண்டமணி, இதற்காக கழுத்து பட்டை அணிந்து இருந்தார்.

இந்நிலையில், அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முழுமையான உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு இருதய ஆபரேஷன்' செய்வது என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.

அதன்படி, கவுண்டமணிக்கு நேற்று காலை 7.30 மணிக்கு இருதய ஆபரேஷன்' நடத்தப்பட்டது. 4 மணி நேரம் ஆபரேஷன்' நடந்தது. பகல் 12 மணிக்கு கவுண்டமணி ஆபரேஷன்' தியேட்டரில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார்.

ஆபரேஷன்' வெற்றி பெற்றதாகவும், கவுண்டமணி உடல்நலத்துடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து சில நாட்கள் அவர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருப்பார் என்றும், 15 நாட்களுக்குப்பின் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment