
சென்னை ஐகோர்ட்டில் கடந்த 4 ந் தேதி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார்தங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், முதல் அமைச்சர் கலந்து கொண்ட விழாவில், நடிகர் அஜீத் கூறிய கருத்து தொடர்பாக அவரை கண்டித்து நான் பேட்டி அளித்தேன். அதைத்தொடர்ந்து அஜீத்தின் தூண்டுதலின்பேரில், அவரது மானேஜரின் தலைமையில் 15 க்கும் மேற்பட்டவர்கள் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள எனது வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார்கள்.
இதுகுறித்து தரப்பட்ட புகாரின் அடிப்படையில், எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், எந்த ஒரு விசாரணையும் நடைபெறவில்லை. எனவே, அஜீத் மீதான வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜாக்குவார்தங்கம் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயஅறிவியல் துறையின் அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து ஜாக்குவார் தங்கத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment