
நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஒரு பேட்டியில், ’’விஜய் அரசியலுக்கு வருவதை எண்ணி விஜயகாந்த் பயப்படுகிறார்’’ என்று கூறியிருந்தார்.
இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, ’’ அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பொதுவாகவே நாங்கள் யாரை பற்றியும் குறை சொல்லி பேசுவது இல்லை.
என்றாலும் அப்பாவிடம் இதுபற்றி கேட்டேன். ``நான் அப்படி சொல்லவே இல்லை'' என்றார்.
அண்ணன் விஜயகாந்த், என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர்.
அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment