
விஜய் டிவியின் முதன்மை நிகழ்ச்சியான நீயா நானா’வின் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு விரைவில் கல்யாணம். பொண்ணுக்கு ஊரு திருச்சி.
கோபிநாத்துக்கு பெண் தேடும் படலத்தில் பிரபல ஜோதிடர் வித்யாதரனும் ஒருவர். இந்த படலம் கோபியிடம், ‘’எந்த மாதிரி பொண்ணு வேணும்’’என்று கேட்டதற்கு,
முதலில் சுறுக்கமாக ‘என் அம்மா மாதிரி பொண்ணு வேணும்’’என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் கொஞ்சம் விரிவாக, ‘’அம்மா என்னோட சின்னச்சின்ன குறைகளுக்கு சலிச்சுக்கவோ, கோபப்படவோ மாட்டாங்க. என்னை ரொம்ப ப்ரியமா பார்த்துக்குவாங்க. அதான் சொன்னேன்..அம்மா மாதிரி பொண்ணு வேணும்னு’’என்று சொல்ல அதே மாதிரி பொண்ணு பார்திருக்காங்களாம்.
இனி கோபிநாத் தம்பதியின் நீயா? நானா? விரைவில் நடக்கும். இந்த நீயா நானா -இல்லறத்தில் அன்பை காட்டுவதில் நீயா நானா.
No comments:
Post a Comment