
சென்னையின் மையப்பகுதியான ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை கட்டிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் வரும் 2010 11ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதில் கலந்துகொள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று சட்ட சபைக்கு வந்தார். அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அமரும் பகுதியில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்து முடிக்கும் வரை விஜயகாந்த் அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் பட்ஜெட் உரையை கேட்காமலேயே, பட்ஜெட் உரையை புறக்கணிப்பதாக கூறி வெறிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment