
ரஜினி,ஷங்கர்,சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வேகமாக வளர்ந்து வருகிறது எந்திரன்.
சென்னை புறநகர் பகுதியான மேற்கு முகப்பேர் அருகே உள்ள மதுரவாயல் உள்வட்ட சாலை மேம்பாலம் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
வெளிநாடு போல் தோற்றமளிக்கும் இந்த மேம்பாலத்தை பார்வையிட்ட டைரக்டர் ஷங்கர், எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இந்த மேம்பாலத்தில் வைத்து படம் பிடிக்க விரும்பினார்.
ரஜினிகாந்திடம் கூறி ஒப்புதல் பெற்று நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து படபிடிப்பு நடைபெறுகிறது.
இதில் ரஜினிகாந்தை போலீஸ் அதிகாரி வேடத்தில் உள்ள துணை நடிகர்கள் துரத்துவது போலவும் ஆனால் ரஜினிகாந்த் ஸ்டைலாக இறங்கி நவீன ரக துப்பாக்கியால் போலீசை பார்த்து சுடுவது போலவும் படமாக்கினார்கள்.
இதற்காக ராட்சத கிரேன்கள், நிறுவப்பட்டன. படப்பிடிப்பில் பயன்படுத்தும் போலீஸ் வாகனங்களை ரோட்டில் கவிழ்த்து போட்டு வைத்தனர்.
ரஜினிகாந்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் காட்டு தீ போல பரவி சுற்று வட்டார பொது மக்கள் படப்பிடிப்பை பார்க்க கூடிவிட்டனர். மேலும் பைபாஸ் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளும் ஆங்காங்கே வண்டியை நிறுத்திவிட்டு படப்பிடிப்பை பார்க்க திரண்டனர். இதனால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. அந்த பகுதியே பரபரப்பில் மூழ்கியது.
ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் தங்களது கையிலுள்ள செல்போன் கேமராவால் போட்டோ எடுக்க முயன்றனர். ஆனால் படப்பிடிப்பின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்கள் செல்போனில் படம் பிடிப்பதை தடுத்தனர்.
No comments:
Post a Comment