Showing posts with label manoramma told about kamal. Show all posts
Showing posts with label manoramma told about kamal. Show all posts

Friday, March 19, 2010

kamal

திருமணம் என்பதில் கமல் தொடர்ந்து முரண்பட்டு வருகிறார். திருமண பந்தத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று அவ்வப்போது பேட்டியின் போது சொல்லி வருகிறார்.

சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘’நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க கொடுத்த விலைதான் திருமணம். ஓட்டல்களில் தங்கும்போது கூட இருப்பது யார் என்று கேட்டு இம்சை செய்தார்கள். பதில் சொல்லியே மாளாது.அப்புறம்தான் ஒரு முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டேன்’’என்றார்.

இதற்கு நடிகை மனோரமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

’’திருமணங்கள் தேவை இல்லை என்று கமல் காலம் கடந்து சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை திருமணங்களை நான் எதிர்க்கவில்லை.

எனக்கு திருமணம் நடந்ததால் என்மகன் பூபதி என்ற முத்து கிடைத்தான். அவனுக்கு மூன்று குழந்தைகள் முத்துக்களாய் பிறந்துள்ளன. ஒரு பெண் டாக்டருக்கு படிக்கிறாள். இன்னொரு பெண் கல்லூரியில் படிக்கிறாள்.

கமல் திருமணம் செய்ததால்தான் ஸ்ருதி என்ற முத்து கிடைத்து இருக்கிறார். எல்லோரும் என்னை ஆச்சி என்று அழைக்கின்றனர். சமீபத்தில் ஒரு விழாவில் வீர மறத்தி மனோரமா வாழ்க என்று கோஷமிட்டனர். அது மகிழ்ச்சியளித்தது.

ஆண், பெண் இருபாலரும் திருமணத்துக்கு முன்பே ஆண்மைக்குறைவு, எய்ட்ஸ் போன்றவற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதை சட்டமாக்கும்படி அரசிடம் வற்புறுத்துவேன்.

கள்ளக்காதல், கொலைகள் போன்றவை இந்த பிரச்சினைகளால்தான் நடக்கின்றன. எனக்கு தெரிந்த பல பெண்கள் எய்ட்ஸ் மற்றும் ஆண்மைக்குறைவு கணவர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இத்தகைய குறைபாடு உள்ள இளைஞர்களின் பெற்றோர்கள் பண ஆசையால் அப்பாவி இளம் பெண்கள் வாழ்வை சீரழிக்கிறார்கள்.

அந்த பெண்களை காப்பாற்ற புதிய இயக்கம் துவங்க உள்ளேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் இருக்கிறேன்.

நிறைய பெண்களிடம் இருந்து என் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து கடிதங்கள் வருகின்றன’’என்று தெரிவித்துள்ளார்.