சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண்பதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் மின்சார ரெயில்கள் (எம்.ஆர்.டி.எஸ்) இயக்கப்படுகிறது.
கடற்கரையில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வி.எல்.சி.ஓய்1) சேப்பாக்கத்திற்கு இரவு 7.20 க்கும், வேளச்சேரிக்கு இரவு 7.50 க்கும் சென்றடையும். 7.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வி.எல்.சி.ஓய்2) இரவு 7.40 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், இரவு 8.10 மணிக்கு வேளச்சேரியையும் சென்றடையும்.
இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வி.எல்.சி.ஓய்3) இரவு 11.40 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், இரவு 12.10 மணிக்கு வேளச்சேரியையும் சென்றடையும். இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வி.எல்.சி.ஓய்4) இரவு 11.50 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், இரவு 12.20 மணிக்கு வேளச்சேரியையும் சென்றடையும்.
அதே போல், வேளச்சேரியில் இருந்து இரவு 6.55, இரவு 7.15, இரவு 11.41 மணி, இரவு 11.51 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.