Showing posts with label aijth. Show all posts
Showing posts with label aijth. Show all posts

Friday, May 21, 2010

இலங்கை அழைப்பு அஜீத் விஜய் புறக்கணிப்பு


இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ..எப்.. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறாம்.

இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. கமல்ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நாயகர்கள் அழைப்பிதழுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் புறக்கணித்து விட்டதால், இலங்கையும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்த்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலைவீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையி திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.





Friday, April 16, 2010

ajith

 Ajith’s Magic Formula - NDTV News Report Video

Wednesday, April 7, 2010

அஜீத்துடன் நடிக்க மறுக்கும் நடிகை

    ஷாலினி மாதிரியே குழந்தை நட்சத்திரத்திலிருந்து நாயகியாகியிருக்கிறார் அவரது தங்கை ஷாம்லி.  ஷாலினி மாதிரியே இவருக்கும் வாய்ப்புகள் வருகிறது.
ஆனால் அவர் மாதிரி இவர் இல்லை.  படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். 
    ஓய்’என்ற தெலுங்கு படத்தில் மட்டுமே  நடித்திருக்கிறார். சிங்கப்பூரில் படிக்கப்போகிறாராம்.  அதுக்கு முன்னே ஒரு படத்தில் மட்டும் நடிக்கப்போகிறாராம். 

கிளாமர் விசயத்தில் அக்கா மாதிரி இருக்கமாட்டாராம்.  கதைக்கு தேவைப்பட்டால்  கிளாமராக நடிப்பாராம்.

ஆனால்
எக்காரணம் கொண்டும் தனது அக்கா கணவர் அஜீத்துடன் மட்டும் நடிக்க மாட்டாராம்.
’’அஜீத் அத்தான் மட்டுமல்ல; எனக்கு சகோதரர். அதனால் அவர் கூட மட்டும் நடிக்க மாட்டேன்’’என்கிறாராம்.

Friday, March 19, 2010

aijth

அஜீத் எழுதிய உருக்கமான கடிதம்



தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜீத்குமாரை, அல்டிமேட் ஸ்டார் (உச்ச நட்சத்திரம்') என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். அவருடைய பெயருக்கு முன்னால், அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


இந்த பட்டம் வேண்டாம் என்று அஜீத்குமார், திடீர் முடிவு எடுத்து இருக்கிறார். அவர் இப்போது நடித்து முடித்து இருக்கும் அசல் படத்தின் டைட்டிலில், அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பாக, அந்த படத்தை தயாரித்துள்ள சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு அஜீத்குமார் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.


இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்று அஜீத்குமாரிடம், செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அஜீத்,


சமீபகாலமாக இந்திய சினிமா வேறு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்து இருக்கிறது. இந்த சமயத்தில், சில மரபுரீதியான மாற்றங்களை நான் வரவேற்க ஆசைப்படுகிறேன்.


எனவே, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நான் நடித்து வெளிவரும் அசல்' திரைப்படத்தில் இருந்து அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டம், பட டைட்டில்களிலோ, இனி வரும் விளம்பரங்களிலோ பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.


என் போன்ற நடிகர்களையும், ரசிகர்களையும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன்.

என் ரசிகர்கள் கண்ணியமானவர்கள் என்ற கருத்து எப்போதும் பொதுமக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் அஜீத்.