Showing posts with label நான் அடங்கிப்போக மாட்டேன் விஜய். Show all posts
Showing posts with label நான் அடங்கிப்போக மாட்டேன் விஜய். Show all posts

Tuesday, March 30, 2010

நான் அடங்கிப்போக மாட்டேன் விஜய்


நடிகர் விஜய் திருச்சியில் 24 ஏழை ஜோடிகளூக்கு இலவச திருமணம் செய்து வைத்தார்.
அப்போது  பேசிய அவர்,  ‘’ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.
நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். ஆனால் இப்போது 24 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க முடியாது.
சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள்அல்ல. உன்வலையில் விழுவதற்கு இறால் அல்ல. நான் சுறா என்பேன். அதுபோல நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன்’’என்று பேசினார்.