Friday, May 7, 2010

ஐஸ்வர்யாராய் எதிர்ப்பு மணிரத்னம் எச்சரிக்கை

இதிகாச காவியமான ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களில் மாற்றம் செய்து இந்த நவீன காலத்திற்கேற்ற முறையில் படமாக எடுக்கிறார், பிரபல டைரக்டர் மணிரத்னம்.
தமிழ் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் தயாராகும் இப்படத்திற்கு இந்தியில் ராவண் என்று பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய வேடங்களில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரும், துணை வேடங்களில் கோவிந்தா, ரவி கிஷண், நிகில் திவேதி, தேஜஸ்வினி கோல்காபூர், பிரியாமணி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் வரும் ஜுன் மாதம் வெளியாக உள்ளது. தமிழ், இந்தி தவிர்த்து தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே சமயத்தில் டப்பிங் செய்யப்பட இருக்கிறது.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒகேனக்கல்லில் படமாக்கப்பட்டது.
படத்தின் கதைப்படி, 90 அடி உயரத்தில் இருந்து கீழே சீறிப்பாய்ந்து ஓடும் ஆற்றில் அபிஷேக்பச்சன் குதிப்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சியில் அபிஷேக்பச்சனுக்கு பதில், `டூப்' நடிகரை வைத்து படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்தார்.


ஆனால் அந்த காட்சியில், நான்தான் நடிப்பேன் என்று அபிஷேக்பச்சன் பிடிவாதம் செய்தார். ஆற்றுக்குள் மிகப்பெரிய பாறைகள் இருக்கக்கூடும். அதில் மோதினால், உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மணிரத்னம் எச்சரித்தார். என்றாலும், அபிஷேக்பச்சன் பயப்படாமல், அந்த காட்சியில் தானே நடிப்பதாக கூறினார்.
படப்பிடிப்பில் உடன் இருந்த ஐஸ்வர்யாராயும், கணவர் அபிஷேக்பச்சனிடம் அந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவரை அபிஷேக்பச்சன் சமாதானப்படுத்தினார்.
ஒகேனக்கல்லை சேர்ந்த குழந்தைகள் கூட இந்த உயரத்தில் இருந்து குதித்து விளையாடுகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு உள்ள துணிச்சல் என்னிடம் இல்லையா?என்று கேட்டு மனைவியை அடக்கினார். பின்னர், அந்த காட்சியில் நடிப்பதற்காக 90 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறினார்.
படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் `என்ன ஆகுமோ?'' என்று பயந்து கொண்டிருக்க, அபிஷேக்பச்சன் வெற்றிகரமாக அந்த காட்சியில் நடித்து முடித்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

No comments:

Post a Comment