Tuesday, April 6, 2010

ஹீரோவாகிறார் வடிவேல் மகன்

    
    நடிகர் வடிவேலுவுவின் மூத்த மகன் சுப்பிரமணிக்கு 23 வயது ஆகிறது.   பிளஸ்-2' படித்து முடித்த இவர், இப்போது `கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன்' கற்று வருகிறார்.

இவரை நடிக்க வைப்பதற்கு பல டைரக்டர்கள் முயற்சி செய்தார்கள். அதற்கு வடிவேல் முதலில் சம்மதிக்கவில்லை. ``நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்'' என்று வடிவேல் கூறிவந்தார்.
இப்போது அதற்கான நேரம் வந்திருப்பதாக கருதி, வடிவேல் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.
மகனுக்காக, வடிவேல் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். நல்ல கதை அமைந்ததும், மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
  
இது குறித்து அவர்,  ‘என் மகன் சுப்பிரமணிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு பொருந்துகிற மாதிரி ஒரு கதையை தேடி வருகிறேன். இதுவரை மூன்று டைரக்டர்களிடம் கதை கேட்டு இருக்கிறேன். அதில், ஒரு டைரக்டர் சொன்ன கதை சுப்பிரமணிக்கு பொருந்துகிற மாதிரி இருக்கிறது.
என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆவான்.
அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, `பிஸி'யாக முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும்.
என் `மார்க்கெட்' நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்கள் வசம் ஒப்படைப்பதில், பெருமைப்படுகிறேன்’’என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment