Wednesday, March 31, 2010

எடுக்கிறது, வெட்டறது, ஒட்டறது - இதுதான் டைரக்ஷன்! -விஜயகாந்த்

சினிமாவில் டைரக்ஷன் என்பது எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதான் என்றார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த்.

சினிமா நிகச்சி ஒன்றில் பங்கேற்ற விஜயயகாந்த்...
""பொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன். சினிமா விழாக்களுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பாவம் விழா ஏற்பாடு செய்பவர்களுக்குத்தான் பிரச்சினை. தேவையில்லாத தொந்தரவுகள் வரக்கூடும். அதனால்தான் விலகியிருக்கிறேன்.

"இன்னிக்கு எந்தப் படமா இருந்தாலும் அது மதுரைக்காரங்க படமா இருக்கு. மதுரையில் ஷூட்டிங் பண்ணிட்டுதான் வராங்க. நான் 153 படம் பண்ணிட்டேன். அகல் விளக்கு, தாயகம்னு ரொம்ப குறைவான படங்கள்தான் மதுரையில வச்சி எடுத்தோம். ஆனா இன்னிக்கு யார் யாரோ மதுரையில எடுக்கறாங்க. நான்தான் எடுக்காம இருக்கேன்...

நான் இப்போது இயக்குநரா  மாறியிருக்கிறேன்.. நான் எப்பவுமே சீக்கிரமா எடுக்கணும்னு சொல்ற ஆளு. நான் 5 வாரத்துக்குள்ள படத்த எடுத்துக் கொடுத்துடக் கூடிய ஆளு. ஆனா வெற்றிப் படமாத்தான் கொடுப்பேன் என்றார்.

டைரக்ஷன்னா என்னங்க... எனக்குத் தெரிஞ்ச டைரக்ஷன் எடுக்கறது வெட்டறது ஒட்டறதுதான். அதை சரியா பண்ணனும்... ஜனங்களுக்குப் பிடிச்சது எதுன்னு தெரிஞ்சுக்கிட்டு எடுக்கணும்'' என்றார். (டைரக்ஷனுக்கு புது விளக்கம் கொடுத்துட்டாருய்யா இனி யார் வேணும்னாலும் டைரக்டராயிடலாம் என்று  கமெண்ட் அடித்தனர் விழாவுக்கு வந்திருந்த உதவி இயக்குநர்கள்)

No comments:

Post a Comment