Showing posts with label samay. Show all posts
Showing posts with label samay. Show all posts

Friday, March 19, 2010

rokini

சாமியார் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானது. ரஞ்சிதாவுடன் பாலியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன் என்று நித்யானந்தா இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையில் நடிகைகள் ராகசுதா, ரோகினி போன்றோருக்கும் நித்யானந்தருடன் தொடர்பு இருந்ததாக செய்திகள் வந்தன. ராகசுதா பழைய நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி மகள்.


ரோகினி சமூக சேவை ஆர்வலராக உள்ளார். பி.டி.கத்திரிக்காய் ஒழிப்புக்கு பெரும் முயற்சி எடுத்தார். மகளிர் மட்டும் விருமாண்டி, ஐயா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இது குறித்து ரோகிணி, ’’நான் பெண்சிங்கம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். நந்தலாலா படத்தில் நடித்து முடித்துவிட்டேன்.

என்னை நித்யானந்தா சாமியாருடன் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது. அவரை சந்தித்தது இல்லை. ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களுக்கும் போனது இல்லை.

என்னை நித்யானந்தா கூட்டத்தில் பார்த்ததாக ஒரு நடிகர் கூறி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. நான் அந்த கூட்டத்துக்கு போகவில்லை. இதுபோன்ற விழாகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னை அவருடன் சம்பந்தப்படுத்தி வந்த வதந்திகளால் வருத்தமடைந்துள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார்.