Showing posts with label அஸினுக்கு சிபாரிசு செய்யும் விஜய். Show all posts
Showing posts with label அஸினுக்கு சிபாரிசு செய்யும் விஜய். Show all posts

Saturday, March 27, 2010

அஸினுக்கு சிபாரிசு செய்யும் விஜய்

விஜய் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம் சுறா. குருவி, வில்லு, வேட்டைக்காரன் என தொடர்ச்சியாக தன் படங்கள் தோல்விப்படமாக அமைந்ததில் ரொம்பவே அப்செட்டாகியிருந்தார் விஜய். விரைவில் வெளியாக உள்ள சுறாவை விட சிங்கத்திற்கு பிஸினஸ் அதிகம் என்ற செய்தியால் தன் அடுத்த படம் சூப்பர் ஹிட்டாக இருக்க வேண்டும் என தீர்மானமாக இருக்கிறார்.  தனது அடுத்த படத்திற்காக  நிறைய கதைகள் கேட்டு வந்தார். புதுமுக இயக்குநர்களுக்கும் கதை சொல்ல நேரம் ஒதுக்கித் தந்தார்.

இந்நிலையில் பிரபல மலையாள இயக்குநர் சித்திக், தான் மலையாளத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றிபெற்ற "பாடிகார்ட்', படத்தை தமிழில் ரீ-மேக் செய்வது குறித்து விஜய்யிடம்  பேசினார். சித்திக் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக  உடனே  ஓ.கே. சொன்னார். இதுபற்றி விஜய் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது... 
"விஜய்-சித்திக் கூட்டணியில் வெளிவந்த "ப்ரண்ட்ஸ்' படம் மெகா ஹிட்டானது.. அதேபோல் இந்த படமும் வெற்றிப்படமாக அமையும். இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். ராஜ்கிரணும் விஜய்யும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.  இதனால் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய்யுடன் அஸின் நடித்த சிவகாசி, போக்கிரி படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றவை. அந்த சென்ட்டிமென்ட்டில் இந்தப் படத்திற்கும் அஸினை நாயகியாக்கியிருக்கிறார் இளைய தளபதி. படத்தில் வடிவேலுவின் காமெடி சரவெடியும் உண்டு' என்றனர் விஜய்யின் நலன்விரும்பிகள் உற்சாகமாக.

 பாடிகார்டு தமிழ் ரீமேக்கின் இசையமைப்பாளராக வித்யாசாகரும், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பெயர் விஜய்யின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் பெயர் முடிவாகும்.