ஈரம்
படத்திற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் தயாரிக்கும் திகில் படம் ஆனந்தபுரத்து
வீடு.
‘மர்மதேசம்’ புகழ் நாகா இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது ஆனந்தபுரத்து
‘மர்மதேசம்’ புகழ் நாகா இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது ஆனந்தபுரத்து
வீடு பற்றி, ’’ தமிழில்
திகில் கதைகள் கேட்க, பார்க்க இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்காகத்தான் இந்த சினிமா. முதல் பாதி முழுக்க, அடுக்கடுக்காக வந்து விழுகிற முடிச்சுகள். அடுத்த பாதி அவைகள் அவிழ்க்கிற விதம் இதுதான் சாதாரணமான சினிமா. ஆனால் திகில் என வரும் போது நிறைய முடிச்சுகள் போட்டு அவிழ்க்க வேண்டும்.
அந்த முடிச்சுகள் எல்லாமும் ரசிகர்களுக்கு புதிய விருந்தாக இருக்கும். இப்படி ஒரு திகில் படம் தமிழில் வந்தது இல்லை என நிச்சயம் சொல்லுவார்கள்.
இது மாதிரி கதைகளுக்கு நல்ல நடிகர்கள் வேண்டுமே அதனால்தான் நந்தா, சாயாசிங்கை தேர்வு செய்தேன்’’ என்று கூறியுள்ளார்.

விருகம்பாக்கம் வீட்டில் பெரிய ஹாலில் தனியாய் அமர்ந்திருந்த நந்தா, ஆனந்தபுரத்து வீடு பற்றி விழி விரிய விவரித்தார்.
’’இது திகில் படம். திகில்னா
பயமுறுத்தணும், பதறி, பதறி நடுங்க வைக்கணும்.
அது எல்லாமே
இதில் இருக்கிறது. நான், சாயாசிங்.
எங்களுக்கு அழகான குழந்தை.
ஆனால் வாய்பேசமுடியாது. புதுவீட்டில்
அமானுஷ்ய சக்தி
இருப்பது என்
குழந்தைக்கு தெரியவருகிறது. அடுத்து மனைவி
சாயாசிங்கிற்கும் தெரியவருகிறது. ஆனால் நான்
மட்டும் நம்ப
மறுப்பேன். அதனால்
வீட்டை காலி
செய்யாமல் இருப்பேன். படம் எப்படி திகிலுடன்
நகரும் என்று
இப்போது புரியும்’’
என்றவரிடம்,
ஈரம் படத்தில் நடித்தீர்கள். அடுத்தும்
திகில் படத்தில்
நடிக்கிறீர்கள். திகில்
நாயகன் பட்டம்
வாங்க ஆசையா
என்ன? என்று
கேட்டதற்கு,
‘’அப்படியொரு பெயர் வந்துவிடக்கூடாது
என்றுதான் அடுத்து
‘வேலூர் மாவட்டம்’
படத்தில் நடிக்கிறேன்.
மாசிலாமணி படத்தை இயக்கிய
மனோகர் இப்படத்தை
இயக்குகிறார். பிரம்மாண்ட
படங்களை தயாரித்து
வரும் கல்பாத்தி
அகோரம் இப்படத்தை
தயாரிக்கிறார். சாமி
விக்ரம் சார்
மாதிரி போலீஸ்
அதிகாரியாக வந்து அதிரவைக்கப்போகிறேன்’’
என்று அமைதியாக
சிரிக்கிறார்.
’’ரஜினி சார் இந்தப்படத்தை
பார்க்கப்போவதாக சொல்லியிருக்கிறார். ஈரம் படம்
பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்.
இப்போது இந்தப் படத்தைப்பார்த்தால்
பாராட்டுக்களை அதிகப்படுத்துவார். அவரின் வருகைக்காக
காத்திருக்கிறது என் ஆனந்தபுரத்து வீடு’’ என்று
எதிர்பார்ப்புகளை கண்களில் தேக்கிவைத்திருக்கிறார்.
No comments:
Post a Comment