இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறாம்.
இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. கமல்ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நாயகர்கள் அழைப்பிதழுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் புறக்கணித்து விட்டதால், இலங்கையும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்த்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலைவீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.
No comments:
Post a Comment