சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.
அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்து கொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.
அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும் அப்படித்தான்.
முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டு வருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.
நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?
பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிருக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.
’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.
ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.
அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.
விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.
கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாயாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.
பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது.
ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.
பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.
பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒரு ஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.
இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாக ஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.
சுழல் நாற்காலியில் பாட்ஷாவில் ரஜினி மிரட்டுவார். இதிலும் விஜய் மிரட்டுகிறார். ஆனால் காமெடித்தனமாக இருக்கிறது.
போலீஸ் அதிகாரி ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன் அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார் ஷாயாஜி.
ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.
வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகாரி ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.
ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.
இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.
அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொரு மகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.
உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.
பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்திய ரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின் அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.
அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்
இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்
No comments:
Post a Comment